“உள்ளே சென்றவரை காணோம்” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. திருவள்ளூரில் பரபரப்பு….!!!

மர்மமான முறையில் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருநின்றவூர் பெரியார் நகரில் பெயிண்டரான செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் தனது படுக்கை அறையிலிருந்து வெகுநேரமாகியும் வெளியே வராததால் வீட்டில் இருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது செந்தில்குமார் தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் திருநின்றவூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் செந்தில்குமாரின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.