இவ்வளவு ரூபாய் சம்பாதிக்கலாமா…? அதுவும் பெட்டில் படுத்துக்கொண்டு…. பிரித்தானியா நிறுவனத்தின் சூப்பர் திட்டம்….!!

படுத்துக்கொண்டே வருடம் 25 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் crafted beds என்ற நிறுவனம் உயர் ரக படுக்கைகளை தரமாக உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபடுகிறது. இந்த நிறுவனமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. எனினும் வாடிக்கையாளர்கள் எந்த விதத்திலும் துயரப்படக் கூடாது என்பதில் இந்த நிறுவனம் தெளிவாக இருக்கின்றது. இந்நிலையில் அந்த நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு ஆட்கள் எடுக்கப்படுவதாக அவர்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியது. அதாவது ஆய்வாளரின் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர் அந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படும் படுக்கையில் இருக்கும் சவுகரியம் குறித்து தகவல் கொடுக்க வேண்டும்.

இதனையடுத்து வாரம்தோறும் அவர்கள் வீட்டிற்கு ஒரு படுக்கை அனுப்பி வைக்கப்படும். அதன்பின் அவர்கள் பெட்டில் படுத்துக்கொண்டு நெட்ஃபிளிக்ஸில் படம் பார்க்கலாம். இதற்கு செலவாகும் பணத்தை அந்த நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். அதுமட்டுமின்றி அவர்களுக்கு வருட சம்பளமாக 25 லட்சம் ரூபாயை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் மேலாளர் பிரையன் தில்லான் கூறியபோது “வாடிக்கையாளர் திருப்தி எங்களுக்கு முக்கியம். மேலும் இந்த பணிக்கு தேர்வாகும் நபர் வாரம் ஒருமுறை தனது அனுபவத்தில் ரிவ்யூ செய்து நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் இங்கிலாந்தை சேர்ந்த நபர்களிடம் இருந்து மட்டுமே பெறப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *