படிக்கட்டில் தொங்கியபடி பயணம்…. சிரமப்படும் மாணவர்கள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

ஆபத்தான முறையில் படிக்கட்டுகளில் தொங்கிய படி மாணவர்கள் பயணம் செய்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கெலமங்கலத்தில் இருந்து ராயக்கோட்டை பகுதிக்கு அரசு டவுன் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளில் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் பயணிக்கின்றனர். இந்நிலையில் கல்லூரி மாணவ மாணவிகள் பேருந்து படிக்கட்டில் தொங்கிய படி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.

மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கக்கூடிய நேரங்களில் போதுமான அளவில் பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு பயணிக்கின்றனர். எனவே மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *