ரொம்ப கஷ்டமா இருக்கு..! விரைவில் நடவடிக்கை எடுங்க… விவசாயிகள் கோரிக்கை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே கீரனூர், கோரிக்கடவு, நரிக்கல்பட்டி, மானூர், தொப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் நெல் பயிர் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவற்றை விவசாயிகள் விற்பனைக்கு தயாராக அறுவடை செய்து வைத்துள்ளனர். இந்த பகுதியில் விலையை நெல்லின் தரத்திற்கேற்ப நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பெய்த மழையால் நெற்பயிர்கள் வயல்களில் சாய்ந்து சேதம் அடைந்துள்ளதால் நஷ்டம் ஏற்படுகிறது. மேலும் திறந்தவெளியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை சேமித்து வைத்திருப்பதால் அவை வீணாக மழையில் நனைந்து வருகிறது. சில இடங்களில் திறந்த வெளியில் நெல்லை கொட்டி அவற்றை மூடி வைத்துள்ளனர். எனவே உரிய விலை கிடைக்க விரைவில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *