பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்கும் பிரபலத்திற்கு “டும்..டும்”…. வெளியான மேரேஜ் போட்டோ….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் பிரசாந்த் எனும் கதாபத்திரத்தில் நடிக்க வந்தவர் மகேஷ். சீரியலில் இவருக்கும் மீனாவின் தங்கையான ஸ்வேதாவிற்கும் நிச்சயம் முடிந்தது. இதையடுத்து திருமண காட்சிகள் எப்போது வரும் என தெரியவில்லை.

இந்நிலையில் மகேஷிற்கு நிஜ வாழ்க்கையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. அதாவது மகேஷிற்கும், பிரேமலதா என்பவருக்கும் சென்னையிலுள்ள இவிஎஸ் மஹாலில் திருமணம் நடந்துள்ளது. இதற்கிடையில் மகேஷ், பாண்டியன் ஸ்டோர் மற்றும் முத்தழகு சீரியலிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது திருமண நிகழ்வில் முத்தழகு சீரியல் பிரபலங்கள் மட்டும் பங்கேற்றனர்.