ராஜராஜ சோழன் குறித்து பா.ரஞ்சித் அவர்கள் பேசியது பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் இருக்கிறது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய விதமாக பா ரஞ்சித் அவர்கள் பேசினார். அதில் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் ஒடுக்கப்பட்டவர்களின் கற்காலம் என்று அவர் பேசி இருந்தார். இது குறித்து பல்வேறு சமூக ஆர்வலர்களும், ராஜராஜ சோழனின் ஆதரவாளர்களும் பா.ரஞ்சித்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிவந்தனர்.

இந்நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இது குறித்து கருது தெரிவித்துள்ளார் . அவர் பேசியதாவது, இயக்குனர் ரஞ்சித் அவர்கள் கூறியது உண்மை அல்ல அவர் சம்பந்தம் இல்லாத ஒன்றை வேறொன்றோடு சேர்த்து வைத்து பேசுகிறார். இது முறையானது அல்ல என்றும் அவர் கூறும் எந்தவித கருத்திற்கும் முறையான சான்றுகள் இல்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் ராஜராஜசோழன் விஷயத்தில் அவர் கூறியது பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் இருக்கிறது. ஆகையால் இத்தகைய கருத்துக்களை பா ரஞ்சித் தவிர்க்க வேண்டும் என்றுஅமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வலியுறுத்தியுள்ளார்