ப.சிதம்பரத்தின் மனு வெள்ளியன்று விசாரணை….?

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தாக்கல் செய்த மனு விசரணை வெள்ளிக்கிழமை நடைபெறுமென்று தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனிடையே சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் ப.சிதம்பரத்தை கைது செய்ய தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

Image result for p.chidambaram SUPREME COURT

இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் அவரின் மனு பட்டியலிடப்படவில்லைஎன்பதால் விசாரணை நடைபெற வில்லை. இதையடுத்து மனுவில் பிழை இருந்ததாக கூறப்பட்ட அனைத்து பிழைகளையும் சரி செய்து ப.சிதம்பரம் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை  நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.