“நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன்” திருமணம் வேண்டாம்னு சொன்ன ஓவியா..!!

“நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன் என்றும், அதனால் எனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என்றும் ஓவியா தெரிவித்துள்ளார். 

நடிகை ஓவியா களவாணி படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர். இதனால் இவருக்கு என்று தனி ரசிகர்களே இருக்கின்றனர்.  ஓவியா நடித்த களவாணி படம் வெற்றி படமாக அமைந்தது. இதனால் களவாணி படத்தின் இரண்டாம் பாகமான களவாணி 2-விலும் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Image result for களவாணி 2

சற்குணம் தயாரித்து, இயக்கியுள்ள இப்படத்தில் விமல், விக்னேஷ்காந்த், ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஓவியாவிடம் திருமணம் செய்து கொள்வது பற்றியும், அரசியலுக்கு வருவீர்களா? என்றும் கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஓவியா, “நான் திருமணமே செய்துகொள்ளப்போவதில்லை. எனக்கு ஆண் துணை தேவையே இல்லை. நான் தனியாக இருக்கும்போதே மிகவும் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன். எனவே எனக்கு இப்போது திருமணம் வேண்டாம்.

Image result for ஓவியா

எதிர்காலத்தில் எனது  மனது மாறிவிட்டால் அப்போது  பார்ப்போம். எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணமும்  எதுவும் கிடையாது. எனக்கு  சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதே ஆசை.   நான் நடிக்கும் படங்கள் அனைத்தும் லாபம் பார்க்கவேண்டும். அதுவே எனக்கு  போதும்’ என்று  அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *