இவ்ளோ வெயிட் ஏற்றக்கூடாது….!! சோதனையில் சிக்கிய வாகனங்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!

அதிக பாரம் ஏற்றி வந்த 17 வாகனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்கோட்டை, மப்பேடு ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிக பாரம் ஏற்றி வந்த மற்றும் பின்புறம் சரக்கு ஏற்றும் பகுதியின் மேல் பகுதியை உயர்த்தியும் 17 வாகனங்கள் வந்துள்ளன. இதற்கு  ரூ 1 லட்சத்து 42 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சாலை வரி கட்டாத வாகனங்களுக்கு ரூ 3 லட்சத்து 98 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதோடு இந்த சோதனையில் 5 வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டது.

மேலும் சட்டத்திற்கு புறம்பாக அனுமதி இன்றி உயர்த்தி இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற மாற்றம் செய்த வாகனங்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தகுதி சான்று வழங்கப்படுவது இல்லை என்றும் வாகனம் மோட்டார் ஆய்வாளர் கூறியுள்ளார். அதோடு சரக்கு வாகன உரிமையாளர் விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இயக்கினால் சாலைகள் சேதம் அடையாமலும், பிரேக் பெயிலியர் ஏற்படாமல் விபத்துக்களை தவிர்க்கவும் முடியும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *