எங்களது ஆட்சி கலைக்கப்படாது…. குமாரசாமி நம்பிக்கை…!!

எங்களது ஆட்சி கலைக்கப்படாது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் ஆளும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்- ஜனதா தள  அதிருப்த்தி MLAக்கள் 14 பேர் திடீரென ராஜினாமா செய்தனர். இதையடுத்து ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள ஜனதா தள-காங் கட்சிகள் தீவீர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலும் 2 MLAக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய உள்ளோம் என சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர்.

Image result for kumaraswamy karnataka cm

இதனால் கர்நாடகாவில் ஆட்சி காப்பாற்றப்படுமா?இல்லை கவிழுமா ? என்ற குழப்பம் நீடித்து வருகிறது.இது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் குமாரசாமி, கூட்டணி அரசு நீடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும்,நான் பதவி விலக மாட்டேன்,அனைத்து வகையிலும் போராடுவேன் என்றும்  கூறியுள்ளார். மேலும், எனது நம்பிக்கை வீண் போகாது எங்களது ஆட்சி கவிழ்க்கப்படாது என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *