மக்களுக்கு சேவை செய்வதே நமது நோக்கம் என்று டெல்லியில் நடந்த எம்பிகள் கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று பாஜக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நரேந்திர மோடி அவர்கள் கொரோனோ வைரஸின் தாக்கம் இந்தியாவில் பரவாமல் தடுப்பதற்காக நாம் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வர வேண்டும்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் விரைவில் முடிவடையாமல் அதனை ஏப்ரல் 3 வரை நீடித்திருக்கிறோம் ஆகையால் தொடர்ந்து விவாதித்து எம்பிக்கள் அவரவர் தொகுதிகளுக்கு சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கொரோனோ வில் இருந்து மக்களை பாதுகாக்க அந்தந்த பகுதிகளில் உரிய நடவடிக்கைகளை அந்தந்த பகுதிகளில் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்த அவர், மக்களுக்காக சேவை செய்வதே நமது நோக்கம் என்று தெரிவித்தார்.