“நாங்கள் சிறப்பாக விளையாடுவோம்”…. தொடரை கைப்பற்றுவதே  லட்சியம்… தென்னாப்பிரிக்க அணி இயக்குனர்.!!

தொடரை கைப்பற்றுவதே எங்கள் லட்சியம் என்று தென்னாப்பிரிக்க அணியின் இயக்குனர் தெரிவித்துள்ளார். 

தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகின்றது. வருகின்ற செப்டம்பர் 15-ஆம் தேதி  டி20 தொடர்  தொடங்க உள்ளது. இப்போட்டியில் டு பிளெசிஸ் இல்லாததால் தென் ஆப்பிரிக்க அணி கேப்டனாக குயிண்டன் டிகாக் கேப்டனாக செயல்படுவார். இவரது தலைமையில் தென்ஆப்பிரிக்கா அணி நேற்று முன்தினம் இந்தியாவுக்கு வந்துள்ளது.

Image result for South African cricket Team

இந்நிலையில் இந்த தொடர் குறித்து தென்ஆப்பிரிக்க அணியின் இயக்குனர் கருத்து தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்த தொடருக்கு  எங்கள் அணியின் சிறப்பான வீரர்கள் இருக்கின்றனர். இந்த தொடர் தென்னாப்பிரிக்க அணியை எதிர்காலத்தில் கட்டமைப்பதற்கு ஒரு முக்கியமானதாக அமையும். டு பிளெசிஸ் சிறந்த வீரர். அவர் தென்னாப்பிரிக்கா அணிக்கு பல முக்கிய சாதனைகளை படைத்துள்ளார். எனினும் அணியின் வருங்காலத்தை கருத்தில்  கொண்டு டிகாக்  கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Image result for South Africa de kock

இந்த தொடரில் விளையாட வந்துள்ள வீரர்களில் டிகாக்  மிகவும் அனுபவம் வாய்ந்த வீரராக  இருக்கின்றார். அவருடன் அணியில் நம்பிக்கை நிறைந்த சில இளம் வீரர்களும் இருக்கின்றனர். ஆகவே இந்த தொடரில் நாங்கள் மிகவும் சிறப்பாக விளையாடுவோம். இந்த தொடரை கைப்பற்றுவதே எங்கள் லட்சியம் என தெரிவித்தார்.

Image result for South Africa de kock

உலக கோப்பை தொடரில் தென்னாபிரிக்க அணி படு தோல்வி அடைந்து வெளியேறியது. இதனால் அந்த அணி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது இந்த சூழலில் உலக கோப்பைக்கு பிறகு தென் ஆப்பிரிக்க அணி பங்கேற்கும் முக்கிய தொடராக இந்த தொடர் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *