“எங்க குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருக்கும்”..- தனுஷ்…!!!

தமிழில் கிராமம் சார்ந்த படங்களை இயக்கியவர் கஸ்தூரிராஜா. இவரின் மூத்த மகன் செல்வராகவன். இளைய மகன் தனுஷ். இந்த நிலையில் கஸ்தூரி ராஜா சொந்த படம் எடுத்து நஷ்டமாகி கடனாளியாகி சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டிருந்தாராம். அப்போதுதான் தனக்கு 50 லட்சம் ரூபாய் மட்டும் கொடுங்கள். தான் ஒரு படம் எடுக்கிறேன் என செல்வராகவன் கூறினாராம்.

அப்படி உருவான திரைப்படம் தான் துள்ளுவதோ இளமை. அந்த படம் எதிர்பார்க்காத வகையில் பெரிய ஹிட் அடித்தது. இந்நிலையில் ஒரு விழாவில் பேசிய தனுஷ் யுவன் சங்கர் ராஜா இல்லையென்றால் தங்கள் குடும்பம் நடு தெருவில் நின்றிருக்கும் என்றும் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் துள்ளுவதோ இளமை படத்தில் மனதை மயக்கும் பாடல்களை யுவன் கொடுத்தார் என்றும் தெரிவித்திருந்தார்.

Leave a Reply