ஹரிஷ் கல்யாணின்”ஓ மணப்பெண்ணே” OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு….!!

ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் நேரடியாக OTT யில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் ஹரீஷ் கல்யாண். இவரின் நடிப்பில் பியார் பிரேமா காதல், இஸ்பேட ராஜாவும் இளையராணியும், வில் அம்பு மற்றும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ”ஓ மணப்பெண்ணே”.

‘ஓ மணப்பெண்ணே’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்த படத்தை அறிமுக இயக்குனரான கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 2014-ம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான’பெல்லி சூப்பலு’ படத்தின் ரீமேக் ஆகும். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி ”ஓ மணப் பெண்ணே” திரைப்படம் அக்டோபர் 22-ஆம் தேதி நேரடியாக ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *