ஒருவழியாக சூயஸ் கால்வாயில்…ஒருவார போராட்டத்திற்கு பின் …தரை தட்டிய கப்பல் மீட்பு …!!!

சூயஸ் கால்வாயில் சரக்கு கப்பல் ஒன்று சிக்கிக் கொண்ட நிலையில், மீட்புக்குழுவினர் அந்தக் கப்பலை மீட்டெடுத்தனர்.

ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளின் கடல் வழி போக்குவரத்தை  இணைக்கும் ,சூயஸ் கால்வாயில் கப்பல் ஒன்று தரைதட்டி நின்றதால் ,அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிகழ்வானது கடந்த வாரம் செவ்வாய்கிழமை அன்று ,20 ஆயிரம்  டன் பெட்டகங்களை சுமந்து வந்த ஜப்பானின் ‘எவர்கிவன்’ கப்பல், சூயஸ் கால்வாய் வழியாக வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அந்த சரக்கு கப்பல் தரை தட்டி நின்றதால், சூயஸ் கால்வாயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது  . உலக அளவில் 15% கப்பல் வர்த்தகப் போக்குவரத்தானது,  சூயஸ் கால்வாயில்  நடைபெற்று வருகிறது.

இந்த திடீர் போக்குவரத்து பாதிப்பால் ,சுமார் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ,தகவல் வெளியாகியது. இதனால் ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கடல் வழி போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. எனவே தரை தட்டி நின்ற கப்பலை செயற்கைக்கோள் மூலம் துல்லியமாகக் கண்காணிக்கப்பட்டு, மீட்பு பணிகள் நடைபெற்று வந்தது . இதன்படி மீட்புக்குழுவினர் தரை தட்டி நின்ற கப்பலை, 14 சக்திவாய்ந்த இழுவைப் படகுகள் மூலமாக , சரக்கு கப்பலை மிதக்க வைக்க முயற்சித்தனர். இவ்வாறு ஒருவார காலமாக முயற்சி செய்து ,பெரும் போராட்டத்திற்குப் பின், ‘எவர்கிவன்’ கப்பலை மீட்புக்குழுவினர் மிதக்க செய்தனர். இதனை  சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் லெப் டினன்ட் ஜெனரல் ஒசாமா ரபே தெரிவித்தார்.