ஒருநாள் மற்றும் டி20 தொடரில் …. ஆஸ்திரேலிய அணியில்…. முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை …!!!

ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர்,பேட்   கம்மின்ஸ்  உள்பட முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை .

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய ஒயிட்-பால் கிரிக்கெட் அணி விளையாட உள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஐந்து டி20  மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி விளையாடுகிறது. இதன்பிறகு வங்காள தேசத்துக்கு எதிராக ஐந்து  டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்நிலையில் இந்த  தொடருக்கான 18 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி  அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பட்டியலில் அணியின் முக்கிய வீரர்களான பேட் கம்மின்ஸ், டேனியல் சாம்ஸ் , ஜை ரிச்சர்ட்சன், மேக்ஸ்வெல் , கேன் ரிச்சர்ட்சன், டேவிட் வார்னர், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை.

ஆஸ்திரேலிய அணி :
ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஆஷ்டேன் அகர், வெஸ் அகர், ஜேசன் பெரேன்டர்ஃப், அலேக்ஸ் கேரி,  டேன் கிறிஸ்டியன், ஜோஷ் ஹசில்வுட், மொய்சஸ் ஹென்ரிக்ஸ்,  மிட்செல் மார்ஷ்,  ரிலே மெரிடித், பென் மெக்டெர்மோட், ஜோஷ் பிலிப், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன்,  ஆஷ்டோன் டர்னர், அண்ட்ரூ டை, மேத்யூ வடே,  ஆடம் ஜம்பா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *