ஒருநாள் கிரிக்கெட் தொடரில் …உலக சாதனை படைத்த …ஆஸ்திரேலியா சிங்க பெண்கள் …!!!

ஆஸ்திரேலியா ஆண்கள் அணியின் ,ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் உலக சாதனையை, ஆஸ்திரேலியா மகளிர் அணி முறியடித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் மகளிர் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கு பெற்றது  . இந்த ஒரு நாள் போட்டி தொடரில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதிக் கொண்டனர் . இந்த தொடருக்கான முதலாவது ஆட்டம் மானது நேற்று மவுன்ட் மாங்கானுவில் நடைபெற்றது . இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் முடிவில் 212 ரன்களில் ஆல் அவுட்டானது.

இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 38.3 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்களை எடுத்து நியூசிலாந்தை வீழ்த்தியது . இந்த வெற்றியானது சர்வதேச ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக விளையாடிய ஆஸ்திரேலிய மகளிர் அணியின் 22வது வெற்றியாகும். இதற்கு முன்பாக ஆஸ்திரேலியா ஆண்கள் அணி சர்வதேச ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக 21  போட்டிகளில் வெற்றி பெற்றதே உலக சாதனையாக இருந்தது. ஆனால் தற்போது 18 ஆண்டிற்கு பின் அந்த சாதனையை ஆஸ்திரேலியா மகளிர்  அணி முறியடித்துள்ளனர்.