உலகத்தை மிரட்டும் கொரோனா… 11.62 கோடியாக உயர்வு… முதன்மை பட்டியலில் 5 நாடுகள்….!!

உலக அளவில் கொரோனா பாதிப்பு 11.62 கோடி  உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறதே தவிர குறைந்தபாடில்லை.தொற்று அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா, அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன், ஆகியவை முதல் 5 இடங்கள் முதன்மை பட்டியலில்  உள்ளன.

முதன் முதலாக சீனாவின் வுகான்  நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்  ஒரு ஆண்டை கடந்து நிலையிலும்  அதன் வீரியம் சற்றும் குறைபாடில்லை. இதனிடையே உலகம் முழுவதும் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை11.62 கோடியை கடந்துள்ளன.

பாதிப்பில் இருந்து இதுவரை 9.18 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ள நிலையில் ,வைரஸ் தாக்குதலினால் 25.80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2.17 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்நிலையில்89 ஆயிரத்து 700 க்கும் மேற்பட்டவர்கள் நிலைமை கவலைக்கிடமாவே உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *