இத்தாலி நாட்டில் புதிய வலதுசாரி அரசாங்கம் பாரம்பரிய குடும்ப விஷயங்களுக்கு வலுவான முக்கியத்துவத்தை கொடுக்கின்றது. இதனால் ஒரே பாலின பெற்றோரின் உரிமைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் எதிர்ப்பால் ஓரினச்சேர்க்கை தம்பதிகளுக்கு தத்தெடுக்கும் உரிமையை வழங்குவதை நிறுத்தியுள்ளது.
மேலும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்கும் முறையையும் இன்னும் அங்கீகரிக்கவில்லை. இதனால் கடந்த சனிக்கிழமை மிலன் நகரில் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டமானது “Hands of our sons and daughters” என அழைக்கப்பட்டது. இது அங்குள்ள பாதசாரி சதுக்கத்தில் வைத்து நடைபெற்றது. மேலும் இதில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நகரம் முழுவதும் வானவில் கொடிகளை அசைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.