உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை..4 ஆண்டுகளாக தொடர் சாதனை….அமைச்சர் விஜய பாஸ்கர்…!!!

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தில் தமிழகத்துக்கு தொடர்ந்து 4 ஆண்டுகளாக விருது அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இன்று நடைபெற்ற சட்ட பேரவை கூட்டத் தொடரில் சுகாதார மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  இறந்தவர்களின் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டம்  தொடங்கப்பட்ட நாளிலிருந்து மொத்தம் 7197 உறுப்புகள் பெறப்பட்டுள்ளதென  மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை கொள்கை விளக்க பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Image result for உடல் உறுப்பு மாற்று

தொடர்ந்து பேசிய அவர்,  இத்திட்டத்தில் 2008 -2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்  வரை  மரணம் அடைந்த  1843 கொடையாளர்களிடம் இருந்து உறுப்புகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும்  உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் முதன்மை  மாநிலமாக உள்ளதாகவும், கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து இதற்கான சிறப்பு  விருதினை தமிழக அரசு பெற்று வருவதாகவும் சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியுள்ளார்.