ஒரே குடும்பத்தின், நாகர் கலை கைவண்ணத்தில்… அயோத்தி ராமர் கோயில் – ஆச்சர்ய தகவல்கள்


குஜராத்தில் உள்ள சோமநாதர் ஆலயத்தை வடிவமைத்து கட்டிட பணியை மேற்பார்வைட்டவரின் பேரனின் கைவண்ணத்தில் உருவாகிறது அயோத்தி ராமர் கோவில். அது பற்றிய தகவல்களை பார்க்கலாம்.

உத்தரப்பிரேதேசம் மாநிலம்  அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவில் நாகர் கட்டிடக்கலையின் அடிப்படையில் அமைகிறது. 5 குவிமாடங்களுடன் 161 அடி உயர கலசகோபுரத்துடன் அமைய உள்ள இந்த கோவிலை வடிவமைத்து கட்டும் பொறுப்பை குஜராத்திலுள்ள சோம்நாத் ஆலயத்தை வடிவமைத்து கட்டிய பிரபாகர் ஜி.சோம்புராவின் பேரன் அகமதாபாத்தைச் சேர்ந்த சந்திரகாந்த் பாய்சோமுர ஏற்றுள்ளார். இவர் தான் குஜராத்தில் உள்ள அக்ஷர்தாம் கோவில் வடிவமைத்து காட்டியுள்ளார். 77 வயதான சந்திரகாந்த் பாய்ச்சோமுரவிடம் இந்த கோவில் வடிவமைப்பு பணியை 1990 ஆம் ஆண்டில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவராக இருந்த அசோக் சிங்கால் அளித்துள்ளார். அப்போது கோவிலுக்குள் அளவிடும் டேப்பை கூட எடுத்துச் செல்ல அனுமதி இல்லாத நிலையில் கால்களாலேயே அளந்து அதன் அடிப்படையில் கோவிலுக்கான வரைபடத்தை உருவாக்கி அதற்கான பணிகளை கடந்த 30 ஆண்டுகளாக மேற்கொண்டு வந்துள்ளார்.

முதலில் 212 தூண்களுடன் 3 குவிமாடங்கள் மற்றும் 140 ஓர் அடி உயர கலசகோபுரத்துடன் கோவிலை  கட்டத் தீர்மானித்து அதற்கேற்ப பணிகள் இதுவரை நடைபெற்று வந்ததாக சந்திரகாந்த் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் போதிய இடம் கிடைத்துள்ள நிலையில் ராமர் பிறந்த இடத்தில் அமைய உள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயத்தை பார்வையிட உலகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் வருவார்கள் என்ற அடிப்படையில் கோவில் வரைபடத்தை மாற்றியமைத்த உள்ளதாக தெரிவித்தார். தற்போது 360 தூண்களுடன் விசாலமான ஐந்துக்கு குவிமாடங்களுடன் 161 ஓர் அடி உயர கோபுர கலசத்துடன் அமைக்கப்பட உள்ளதாக சந்திரகாந்த் பாய்ச்சோம்புர தெரிவித்தார். கர்ப்ப கிரகத்தை விட எந்த ஒரு கட்டடமும் பெரியதாக ஆகிவிடக்கூடாது என்ற சிற்பக்கலை மற்றும் வாஸ்து சாஸ்திர அடிப்படையில் இந்த கோவிலை கட்ட உள்ளதாக தெரிவித்த அவர் பிரதான கோவிலை சுற்றி நான்கு சிறிய கோயில்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

The statue of Lord Rama in Ayodhya is converted into a temporary ...

கர்ப்பக்கிரகம், கொடு மண்டபம், விருத்திய மண்டபம், ரங்க மண்டபம், கீர்த்தனை மண்டபம் மற்றும் பிரார்த்தனை மண்டபம் ஆகியவை அமைக்கப்படுகின்றன. 10 ஏக்கரில் மூன்று தளங்களாக கோயில் அமைய உள்ள நிலையில் கோவில் வளாகம் 57 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட உள்ளதாகவும் அவர் கூறினார். இதற்கான கற்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பஞ்சிமலையிலிருந்து கொண்டு வரப்பட உள்ள நிலையில் மூன்றரை ஆண்டுகளில் கோவிலை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சந்திரகாந்த் பாய்சோமுர தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பல்வேறு மொழிகளில் ஸ்ரீராம் என எழுதப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட செங்கற்கள் இந்த கோவிலின் அடித்தளத்திற்கு  பயன்படுத்தப்பட உள்ளது சிறப்பம்சமாகும். கோவில் படிக்கட்டுகள்  16 அடி அகலத்தில் அமைக்கப்பட உள்ளதாக சந்திரகாந் வாய்சோமுற தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *