ஆன்லைனில் ஆர்டர் செய்தது 15,000 செல்போன்… ஆனா வந்தது வெங்காயம்… அதிர்ச்சியில் இளைஞர்..!!

இமாச்சல பிரதேசத்தில் ஆன்லைன் மூலம் ஒருவர் செல்போன் ஆர்டர் செய்ததற்கு செல்போனுக்கு பதிலாக வெங்காயம் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இமாசலப் பிரதேசம், ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த சசி தாக்கூர் என்பவர் இணையம் வழியாக ஒரு செல்போனை ஆசை ஆசையாக ஆடர் செய்தார். அந்த செல்போனை விலை 15 ஆயிரம், டெலிவரி பணத்தை கிரெடிட் கார்டு மூலம் அவர் செலுத்தியிருந்தார். இதை அடுத்து சில நாட்கள் கழித்து அவருக்கு கொரியர் மூலம் செல்போன் வந்தது .அதை ஆவலாய் பிரித்துப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பெட்டியின் உள்ளே இருந்தது செல்போன் அல்ல வெங்காயங்கள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் உள்ள செல்போன் நிறுவனத்துக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார். இதையடுத்து அவர்கள் எழுத்துப்பூர்வமாக கடிதம் எழுதித் தருமாறு கூறினார்கள். பத்து நாட்களில் உங்களுக்கு புதிய போன் அனுப்பப்படும் என்று கூறினார். சசி தாக்கூர் புதிய போனை எதிர் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்வதில் ஆர்வம் காட்டுபவர்கள் எவ்வளவு தூரம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.