மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு கவிழந்ததை தொடர்ந்து பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.
மத்திய பிரதேஷ மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கமல்நாத் அறிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பே கமல்நாத் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரசுக்கு பெரும்பான்மை குறைந்ததால் முதல்வர் ராஜினாமா செய்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் பதவியை ராஜினாமா செய்வதாக கமல் நாத் அறிவித்துள்ளார்.
22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் மத்திய பிரதேச சட்டப்பேரவை காங்கிரஸின் பலம் 86 ஆகக்குறைந்தது.பிற்பகலில் ஆளுநர் லால்ஜி டாண்டனை சந்தித்து தனது ராஜினாமா கடித்தை அளிக்கின்றார் கமல்நாத்.இதனால் பேரவையில் 107 எம்எல்ஏக்களை வைத்துள்ள பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கின்றது.
இதற்கிடையே இங்கு நடந்து கொண்டிருப்பதை மக்கள் அறிவார்கள். உண்மை வெளிவரும். எம்எல்ஏக்களை அடைத்து வைத்திருப்பதன் பின்னணியில் உள்ள உண்மைகள் மக்களுக்கு தெரியும் என்று கமல் நாத் பேட்டியளித்தார்.