25 கோடி மதிப்பிலான “தானியங்கி மின்தடை மையம்” திறந்து வைத்தார் OPS …!!

தேனியில் 25 கோடி மதிப்பிலான  தானியங்கி மின்தடையை நீக்கும் மையத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

சமீப காலமாக மின்தடை என்பது பெரும் பிரச்சனையாக இருந்து வருகின்றது. தமிழகம் முழுவதும் தொடர் மின்வெட்ட்டால் மக்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். பல கிராமங்களில் ஒரு நாளைக்கு 5 முறைக்கு மேல் மின்வெட்டு ஏற்படுகின்றது. அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் மின்தடையை நீக்கும் தானியங்கி மையத்தை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்துவைத்தார்.

Image result for தானியங்கி மின் தடை மையம்

சுமார் 25 கோடியே 52 ஆயிரத்து 371 ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தின் மூலமாக மின்தடை ஏற்படும் பகுதிகளை கணினி மூலம் தானாகவே  அறிந்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள மின்தடை குறித்த புகார்களை  அளிக்கவேண்டிய அவசியம் இருக்காது.இதில் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.