இரவில் கேட்ட சத்தம்…. தம்பதியினருக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை….!!

ஓய்வு பெற்ற ஊழியரின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பால்வாய் கிராமத்தில் ஆனந்தகிருபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் வேலை பார்த்து தற்போது ஓய்வு பெற்றிருக்கிறார். இவருக்கு திருமணமாகி ரேணுகா என்ற மனைவி உள்ளார். இவர் அரசு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலை பார்த்து தற்போது ஓய்வு பெற்றிருக்கிறார். இந்நிலையில் ஆனந்தகிருபாகரன் தனது மனைவியுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது நாயின் சத்தம் அதிக அளவில் கேட்டதினால் வெளியே எழுந்து வந்து பார்த்துள்ளார்.

அப்போது யாரும் வெளியில் இல்லாததால் நாயை கட்டி வைத்து விட்டு உள்ளே சென்றுள்ளார். ஆனால் மர்ம நபர்கள் வீட்டின் பின்புறமாக ஏணியின் மூலமாக மாடியில் ஏறி அறைக்குள் சென்றுள்ளனர். அதன்பின் அறையில் இருந்த எல்.இ.டி டிவி, லேப்டாப் போன்ற விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து செல்லும் போது நாய் சத்தம் போட்டு இருக்கிறது. பின்னர் நாயின் சத்தத்தை கேட்டு திரும்பவும் ஆனந்தகிருபாகரன் எழுந்து வெளியே வந்து பார்த்த போது மறைந்திருந்த மர்ம நபர்கள் அவரை உருட்டு கட்டையால் தலையில் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து அவரின் அலறல் சத்தம் கேட்டு எழுந்து வந்த மனைவி ரேணுகாவின் கையில் மர்ம நபர்கள் கத்தியால் வெட்டி உள்ளனர். பின்னர் இவரின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதை அறிந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். பிறகு காயமடைந்த தம்பதியினரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *