ஓஹோ..! அதுலாம் போதை இல்லனு சொல்லுறீங்களா – நறுக்கென்று கேள்வி கேட்ட சீமான் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  போதைப்பொருள் கஞ்சா, அபின், ஹெராயின், குட்கா,  பான்பராக் போன்ற போதை பொருள் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது, அதை ஏற்கிறோம். அதை விற்பவர்களின் சொத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்றால் இப்போ அரசே மது கடைகளை திறந்து அதில் விற்கின்ற சரக்குகள் எல்லாம் போதை பொருள் இல்லையா? அது எப்படி கட்டமைக்கிறீர்கள்.

இதையெல்லாம் போதை பொருள், இது போதைப் பொருள் இல்லை என்று அரசு சொல்ல வருகிறதா? அப்போது அந்த போதை பொருளை விற்பவர்களின் சொத்தை பறிமுதல் செய்தால், இந்த போதைப் பொருளை…  இத்தனை ஆண்டுகளாக விற்று, இதை தயாரிக்கின்ற தொழிற்சாலைகளை…. அரசு சார்ந்தவர்களே, அதிகாரத்தில் இருப்பவர்களே…

தொழிற்சாலைகளை நடத்தி, அதற்கு சரக்கு அனுப்புகிறார்களே, அப்போது அவர்களுடைய சொத்தை யார் பறிமுதல் செய்வார்கள்?  நீங்கள் அதிகாரம் இருக்கு, அவர்களுடைய சொத்தை பறிமுதல் செய்கிறீர்கள், அதிகாரம் அற்ற, அதிகாரம் இல்லாததால் நாங்கள் கேள்வி தான் கேட்க முடியும். உங்கள் சொத்தை யார் பறிமுதல் செய்வது? அப்போது எந்த மாதிரி மக்களிடம் சொல்ல விரும்புகிறீர்கள்.

கஞ்சா, ஹெராயின் தான் போதைப்பொருள், இந்த பிராந்தி, விஸ்கி, ரம் எல்லாம் போதை பொருள் இல்லை என்று சொல்ல வருகிறீர்களா? இது ஒரு வேடிக்கையாக இருக்கிறது, இந்த மாதிரி அணுகுமுறையை வேடிக்கையாக இருக்கிறது என விமர்சித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *