பத்து தல-க்கு வந்த முட்டுக்கட்டை.. விடுதலைக்கு மட்டுமே அமோக வரவேற்பு..!!!

சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றது. தற்போது பத்து தல திரைப்படம் சிம்பு ரசிகர்கள் எப்போது ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இந்த படத்திற்கு சில முட்டுக்கட்டைகள் ஏற்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இப்படம் 30-ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியாக உள்ள விடுதலை திரைப்படம் 31ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விடுதலை திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்கிறது. அந்த வகையில் விடுதலை படத்திற்கு நிச்சயமாக அதிக தியேட்டர்கள் வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே சிம்பு படம் என்றாலே பல சர்ச்சைகளிலும் பிரச்சனைகளும் ஏற்பட்டு வெளியாகும். அந்த வகையில் இப்படத்திற்கு இது மிகப்பெரிய சோதனையாக அமைந்திருக்கிறது.