ஆன்லைன் ஷாப்பிங்கில் மக்கள் பொருள்கள் வாங்குவதால் கடை பொருள்கள் விற்பனை ஆவதில்லை என்று வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர் .
இந்தியாவில் அனைத்து பொருட்களையும் மக்கள் தற்போது ஆன்லைனில் வாங்க தொடங்கிவிட்டனர். ஆன்லைனில் கிடைக்காத பொருட்களே இல்லை என்பதாலும், விலை குறைவாக கிடைப்பதாலும் மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.

இதனால் இந்தியாவில் இருக்கக்கூடிய பல சிறு குறு தொழில் செய்யும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு கடைகளை இழுத்து மூடி வருகின்றனர். குறிப்பாக செல்போன் உதிரிபாகங்கள் அனைத்தும் ஆன்லைனில் மிக மலிவாக கிடைப்பதன் காரணமாக அனைவரும் ஆன்லைனிலேயே செல்போன் உதிரி பாகங்களை வாங்கி வருகின்றனர்.
இதனால் இந்தியாவில் செல்போன் உதிரிபாகங்களை ஆங்காங்கே விற்று வரும் வியாபாரிகள் வியாபாரம் குறைந்து வருகின்ற காரணத்தினால் கடைகளை இழுத்து மூடி வருகின்றனர். இந்த ஆன்லைன் வியாபாரம் சிறுதொழில் செய்யும் வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.