இன்டர்நெட் வசதி இல்லாமல் பணம் பரிமாற்றம் செய்யும் புதிய செயலி ஒன்றை லாவா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பணப் பரிமாற்றம் டிஜிட்டல் மயமாக மாறி வருகிறது. இதற்கு முன்பே google.pay, phone pay , paytm , amazonpay என ஏராளமான செயலிகள் பணப்பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த செயலிகள் யாவும் இன்டர்நெட் வசதி இருந்தால் மட்டுமே செயல்படும். ஆனால் இவற்றை மிஞ்சும் வகையில் புதிய செயலி ஒன்றை லாவா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
லாவா பே என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த செயலியின் மூலம் இன்டர்நெட் வசதி இல்லாமல் பண பரிவர்த்தனை செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி வரக்கூடிய புதிய லாவா மொபைல்களில் இந்த செயலி ஃப்ரீயாக இன்ஸ்டால் செய்யப்படும் என்றும், ஏற்கனவே லாவா மொபைல் பயன்படுத்தி வருபவர்கள் லாவா சர்விஸ் சென்டருக்கு சென்று இந்த செயலியை இன்ஸ்டால் செய்து கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது.