சந்தையிலிருந்து வந்ததும்…… ஒரு சில நிமிடங்களுக்கு….. முதலில் செய்ய வேண்டியது இது தான்….!!

இன்றைய காலகட்டத்தில் வயல்வெளிகளில் விளையக்கூடிய பயிர்கள் மீதும், காய்கறிகள் மீதும் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. எனவே விவசாயிகள் இந்த பிரச்சினையிலிருந்து தப்பிக்க பூச்சிக்கொல்லி மருந்துகளை பயிர்கள் மீது தெளிக்கிறார்கள். பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் தான் பெரும்பாலும் சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றன. இவற்றை வாங்கும் மக்கள் அவற்றை சரியாக கழுவி சுத்தம் செய்யாமல் பயன்படுத்தினால்,

பிற்காலத்தில் உடல் சார்ந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். எனவே பூச்சி கொல்லி மருந்துகளை முற்றிலுமாக காய்கறி, பழங்களிலிருந்து நீக்குவது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை கலந்து கொள்ளவும்.

பின் கடையிலிருந்து வாங்கி வந்துள்ள பழங்கள், காய்கறிகளை அதில் போட்டு சில நிமிடங்கள் ஊறவைக்கவும். பின் அவற்றை அலசி துடைத்து எடுத்தால் மேலே ஒட்டியிருந்த பூச்சிக்கொல்லிகள் நீங்கி விடும். அதன் பின் அதனை தாராளமாக பயன்படுத்தலாம்.