கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக ரவுடியான கோகுல் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடியை சேர்ந்த பார்த்தசாரதி(26) என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் ரத்தினபுரி பகுதியில் பார்த்தசாரதி பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனால் தனிப்படை போலீசார் அவர் தங்கி இருந்த இடத்திற்கு சென்று சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக ரத்தினபுரி 7-வது விதியில் இருக்கும் ஜீவானந்தம் பாலத்தில் இருந்து பார்த்தசாரதி கீழே குதித்தார். இதனால் எலும்பு முறிவு ஏற்பட்டு பார்த்தசாரதியால் தப்பி ஓட இயலவில்லை. உடனடியாக அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.