பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. டிரைவர் பலி; ஒருவர் படுகாயம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எட்டாமடை பகுதியில் சந்திரபோஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜ்குமார் மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலில் இருந்து எட்டாமடை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் தெரிசனங்கோப்பு பழையாற்று பாலம் அருகே சென்றபோது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் அந்தோணி என்பவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்தோணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply