இவரை பார்த்தால் சந்தேகமா இருக்கே…? விசாரணையில் வெளிவந்த உண்மை… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்திலுள்ள நச்சலூர் பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்தின் பெயரில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் அவர் கிருஷ்ணராயபுரம் பகுதியில் வசித்து வரும் பிரதீப் என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரதீப்பை கைது செய்ததோடு விற்பனைக்காக அவரிடமிருந்த 150 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *