6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. உறவினர் போக்சோவில் கைது…. போலீஸ் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரண்ட பள்ளி பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிட தொழிலாளியான நாராயணன்(45) என்ற மகன் இருக்கிறார். நேற்று ஓசூர் பகுதியை சேர்ந்த உறவினரின் மகளான 6 வயது சிறுமிக்கு நாராயணன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் நாராயணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply