ஆன்லைனில் ஏற்பட்ட பழக்கம்…. வாலிபரிடமிருந்து ஜிபே மூலம் பணம் பறிப்பு…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்தில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆன்லைன் மூலம் நவநீதகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த சின்னதுரை என்பவர் அறிமுகமானார். சம்பவம் நடைபெற்ற அன்று மாடசாமியை சின்னதுரை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

இதனையடுத்து அவரது செல்போனை பிடுங்கி ஜிபே மூலம் சின்னதுரை பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்றிக் கொண்டு மாடசாமியை மிரட்டியுள்ளார். இதுகுறித்து மாடசாமி தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சின்னதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.