சட்ட விரோதமான செயல்…. போலீசாரை பணி செய்ய விடாமல் மிரட்டிய நபர்…. அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேட்டை மயிலப்பபுரம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக தங்கராஜ்(55) என்பவர் அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அப்போது போலீசாரை பணி செய்ய விடாமல் தங்கராஜ் மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தங்கராஜை கைது செய்து, அவரிடமிருந்த 18 மது பாட்டில்கள், 300 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.