திருச்செந்தூர் ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலையில்… குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்… பொதுமக்கள் கோரிக்கை..!!!

திருச்செந்தூர் ரயில் நிலையத்துக்கு செல்லும் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கும் நிலையில் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூருக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றார்கள். மேலும் திருச்செந்தூரில் இருந்து தினமும் 7 ரயில்கள் இயக்கப்படுகின்றது. குறிப்பாக நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு வரும் ரயிலில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றார்கள்.

இந்த நிலையில் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் எதிரே ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலை சில வருடங்களாக மோசமான நிலையில் இருக்கின்றது. இந்த பாதையில் மழை காலங்களில் மழைநீர் குலம் போல் தேங்கி நிற்கின்றது. இதனால் ரயில் நிலையத்திற்கு செல்லும் மக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள். ஆகையால் மக்களின் நலன் கருதி சில வருடங்களாக சரி செய்யப்படாமல் இருக்கும் ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.