“கொரோனா” குறித்த தேதியில்….. எளியமுறையில்…. விழிப்புணர்வு திருமணம்….!!

கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் விதமாக கள்ளக்குறிச்சி அருகே திருமண விழா நடைபெற்றது.

உலக நாடுகளை கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்திவரும் சூழ்நிலையில், நாடு முழுவதும் 144 தடைவிதிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 16ஆம் தேதிக்கு முன் பதிவுசெய்யப்பட்ட திருமணங்களை மட்டும் நடத்தலாம் என அரசு தெரிவித்தது.இந்நிலையில், கள்ளக்குறிச்சி அருகே சின்னதுரை – சுஸ்மிதா தம்பதிக்கு இடையே திருமணம் நடைபெற்றது.

கோவிலில் நடைபெற இருந்த  இந்த திருமணம், கொரோனா வைரஸ் பாதிப்பால், கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டதன் காரணமாக அவரது வீட்டில் வைத்து திருமணம் மிக எளிய முறையில் நடைபெற்றது.திருமண நிகழ்வில் மணமக்கள் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக முககவசம் அணிந்து திருமணம் செய்துகொண்டனர். மேலும் மணமக்களின் பெற்றோர் உட்பட திருமணத்தில் 20 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். இதில் பலரும் முகக்கவசம் அணிந்த நிலையிலையே திருமண விழாவில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *