தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நடுநிலை பள்ளியில் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாமை பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவகுமார் வழிகாட்டு நெறிமுறைகளின் படி நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் வட்டார கல்வி அலுவலர்கள் சங்கீதா காளீஸ்வரி, அம்பிகா, ஜெயா ஸ்ரீ, மாவட்ட அமைப்பாளர் பிச்சைமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு ஜே ஆர் சி கொடியேற்றி தொடங்கி வைத்துள்ளார். மேலும் அனைத்து பள்ளிகளுக்கும் பெயர் பலகையை வழங்கியுள்ளார். இதனையடுத்து ஜே ஆர் சி மாவட்ட இணைப்பாளர் ஜேசுதாஸ் தமிழ் மாறன் வரவேற்றுள்ளார்.