“ஒமிக்ரான் வைரஸ்”… இந்தியாவில் கொரோனா உச்சத்தை அடையும்…. விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்….!!

கொரோனாவின் 3-வது அலையானது இந்தியாவில் எப்போது உச்சத்தை அடையும் என்பது தொடர்பாக மனிந்திரா அகர்வால் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் அடுத்து 2 நபர்களுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு ஒமிக்ரான் வைரஸ் பதிவாகி வரும் நிலையில் இந்தியாவில் எப்போது இது உச்சத்தை அடையும் என்றும் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தபடுமா என்ற கேள்வி எழுந்தது. ஏற்கனவே குஜராத், டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் 21 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மும்பையிலும் மேலும் 2 நபர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோபே கூறியபோது ஒமிக்ரான் வைரஸ் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மேலும்  ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி மாநிலத்தில் கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும். இதனையடுத்து வைரசின் தாக்குதலை பொறுத்து ஒன்றிய அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் ஆலோசனை மேற்கொண்டு தேவைப்படும் சமயத்தில் கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுப்போம்” என்று கூறினார்.

இந்நிலையில் ஐஐடி நிறுவன விஞ்ஞானியான மனிந்திரா அகர்வால் கருத்து தெரிவித்தபோது “ஒமிக்ரான் மூலம் கொரோனாவின் 3-வது அலை இந்தியாவில் பிப்ரவரி மாதத்திற்குள் உச்சத்தை அடையும். மேலும் நாட்டில் நாளொன்றுக்கு 1-1.5 லட்சம் வரை நோய் பாதிப்புகள் வரக்கூடும். ஆனால் இது 2-வது அலையை விட மிதமானதாக இருக்கும். ஒமிக்ரான் வேகமாக பரவி வந்தாலும் டெல்டா வைரசில் காணப்பட்ட தீவிரம் இதில் இல்லை என்று தெரிகிறது. தென்னாப்பிரிக்காவில் அதிகளவிலான மக்கள் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதில் தொற்று பரவுதல் மற்றும் மருத்துவமனைகளில் நோயாளிகள் சேர்க்கை ஆகிய தரவுகள் ஒமிக்ரான் வைரஸ் தொடர்பான தெளிவுள்ள பிம்பத்தை நமக்குத் தரும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *