சென்னை வில்லிவாக்கம் பகுதியில் ஜெபஸ்டின் என்பவர் வசித்து வந்தார். இவர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் அருகே கீழப்பனையூர் கிராமத்தில் பேவர் பிளாக் தயார் செய்யும் தொழில் செய்து வருகின்றார். கீழப்பனையூர் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவரது மனைவி வனிதா என்பவர் இங்கு வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வனிதா நேற்று முன்தினம் கலவை இயந்திரத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக கலவை எந்திரத்தில் சிக்கிக்கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீது உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.