ஒடிசா மாநிலத்தில் கியோஜ்கர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் ஜானகி பெண்மணிக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆன  நிலையில் 11 வருடங்களில் 11 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இவர் ஒவ்வொரு வருடமும் ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்தபடியே இருந்ததால் உடல் நலம் மோசமாகியுள்ளது. இதன் காரணமாக ASHA என்ற அமைப்பின் பணியாளர்கள் ஜானகியை குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியதோடு அவருக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துள்ளனர்.

இதற்கு ஜானகியின் கணவர் ரபி கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததோடு குழந்தைகளோடு ஜானகியை வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளார். மேலும் ஜானகி பிறந்த 11 குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்து விட்ட நிலையில் 10 குழந்தைகளையும் வளர்க்க முடியாத சூழல் இருப்பதால்தான் குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துள்ளார். ஆனால் இதை கணவர் புரிந்து கொள்ளாமல் குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்வது எங்கள் வழக்கத்தில் மிகப்பெரிய பாவம் என்று கூறி அவரை வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.