தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் த்ரிஷா, பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் காஷ்மீரில் நடிகர் விஜய் நடிக்கும் காட்சிகள் திடீரென இணையத்தில் கசித்துள்ளது. இது படக்குழு மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னறிவிப்பு இன்றி வீடியோவை யாராவது பகிர்ந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பட்டக்குழு எச்சரித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் படக்குழு மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.