பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் சுஷாந்த் சிங். இவர் திடீரென தற்கொலை செய்துகொண்டு இறந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மனிதர்களுக்கு எப்போதுமே நெருங்கிய தோழனாக இருக்கும் நாய் மனிதர்களின் செல்லப்பிராணியாக வளர்க்ககப்படுகிறது.

அந்த வகையில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் பட்ஜ் என்ற நாயை வளர்த்தார். இந்த நாய் இன்று திடீரென மரணம் அடைந்துள்ளது. இந்த தகவலை நடிகர் சுஷாந்த் சிங்கின் சகோதரி பிரியங்கா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் பட்ஜ் நாயின் மறைவுக்கு ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.