பிரபல ஹாலிவுட் நடிகர் இயர்ல் போயன் ( Earl Boen-81) உடல் நலக்குறைவால் ஹவாயில் இன்று காலமானார். இவர் அர்னால்டு ஸ்வாஸ்நேகர் நடித்த டெர்மினேட்டர் படத்தின் அனைத்து பாகங்களிலும் டாக்டர் பீட்டர் சைபர்மேன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். தி மேன் வித் டூ பிரைன்ஸ், ஏலியன் நேசன் உட்பட பல்வேறு திரைப்படங்கள், டிவி தொடர்கள் ஆகியவற்றில் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.