கழிவுநீர் பாதையில் இறங்கி சுத்தம் செய்யும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்துவது சட்ட விரோதம் என்ற போதும் மலக்குழி மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் சாக்கடை மற்றும் கழிவு நீர் மரணத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2018 முதல் 2022 வரை சாக்கடை மற்றும் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது 308 மரணங்கள் நிகழ்ந்துள்ளது.

அதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 52 பேரும், உத்திரபிரதேசத்தில் 46 பேரும், ஹரியானாவில் 40 என அடுத்தடுத்த மாநிலங்களில் கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்யும் பணி என்பது இறந்துள்ளனர். சாக்கடை மற்றும் கழிவு நீர் மரணத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.