OMG: இந்திய மாணவர் உக்ரைனில் இறந்தது எப்படி…? வெளியான மிக முக்கிய தகவல்…!!!

ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் இந்திய மாணவன் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன்,ரஷ்யா இடையே  கடந்த ஆறு மாதங்களாக பதற்றம் நீடித்து வந்தது. இதையடுத்து சமீபத்தில் உக்ரைன்  நாட்டின் மீது படையெடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கடந்த 6 நாட்களாக உக்ரைன் நாட்டின் தலைநகர் கார்கே உள்ளிட்ட இடங்களில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன்  நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

உக்ரைன் மீதான போரை நிறுத்தி உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங், அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலக தலைவர்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் ரஷ்ய அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் இன்று நாட்டில் கார்கில் பகுதியில் ரஷ்ய படைகள் குண்டு வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது. ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழந்துள்ளது இந்தியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கர்நாடக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கமிஷனர் நடராஜன் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், கூறிய போது புகையின் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் இந்திய மாணவர் நவீன் சேகரப்பா உயிரிழந்துள்ளார்.

இவர் கர்நாடக மாநிலம் ஹாவேரியில் உள்ள சாலகேரி  எனும் பகுதியை சேர்ந்தவர். கார்கில் நகரில் அருகில் உள்ள கடைக்கு அத்தியாவசியப் பொருட்களை வாங்கி நவீன் சென்றுள்ளார். அப்போது அங்கு நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இது பற்றி  உள்ளூர் நிர்வாக அதிகாரி ஒருவர்  அவரது நண்பருக்கு தகவல் தெரிவித்துள்ளார் என  அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *