பாராளுமன்ற தேர்தலில் மோதிக்கொள்ளும் ஒலிம்பிக் வீரர்கள்……!!

ராஜஸ்தான் மணிலா ஒரு மக்களவைத் தொகுதியில் முன்னாள் ஒலிம்பிக் வீரர்கள் இருவர் களம் காணுகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஜெய்பூர் கிராமப்புற மக்களவைத் தொகுதியில் முன்னாள் ஒலிம்பிக் வீரர்களாக விளையாடிய ராஜ்யவர்தன் சிங் ராவுதர் (49) மற்றும் கிருஷ்ண பூணியா (36) ஆகியோர் வேட்பாளராக மோதுகின்றனர். ராஜ்யவர்தன் சிங் தற்போது பாஜக கட்சியில் நிர்வாகியாகவும், மத்திய அமைச்சரைவையிலும் இடம்பெற்றுள்ளார்.  இவர் கடந்த 2014_ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் இதே தொகுதியில் காங்கிரஸின் மூத்த தலைவர் ஜோஸியை தோற்கடித்தார். இந்நிலையில் பாஜக சார்பில் இவரே இந்த தொகுதியில்  மீண்டும் போட்டியிடுகிறார்.  இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் கிருஷ்ண பூணியா  களமிறங்கியுள்ளார். இவர் ஏற்கனவே MLA_வாக உள்ளார்.

காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சி சார்பில் மோதிக்கொள்ளும் இவர்கள் இருவரும்  ஒலிம்பிக் வீரர்கள். ராஜ்யவர்தன் சிங் கடந்த 2004_ஆம் ஆண்டில் நடைபெற்ற அதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச்சுடும் ஆட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். அதே போல 2002 மற்றும் 2006ல் மெல்போர்னில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். மேலும் இவர் இதுதவிர 25 சர்வதேச பதக்கங்களை வென்றுள்ளார். துப்பாக்கிச் சுடும் துறையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு அர்ச்சுனா விருது வழங்கப்பட்டது.


அதே போல கிருஷ்ண பூணியா காமன்வெல்த் போட்டியில் வட்டெறிதல் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர். இந்தப் பதக்கத்தை கடந்த 2010_ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியில் இவர் வென்றார். அதுமட்டுமில்லாமல் இவர் மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றறு கடந்த 2011_ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது பெற்றார். இவர்கள் இருவருக்கும் இருக்கும் சுவாரஸ்யமான ஒற்றுமை என்னவென்றால், இவர்கள் இருவருமே ஒரே ஆண்டில் தான் ஆதாவது கடந்த 2013_இல் தான் அரசியலுக்குள் நுழைந்தனர். எனவே இருவருமே  அரசியலில் ஒரே அனுபவம் பெற்றவர்களாக விளங்குகின்றனர்.