ஒலிம்பிக் போட்டிக்கு வந்த புதிய சிக்கல் …. வெளியான பகீர் தகவல்….!!!

டோக்கியோவில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம்  கூறியிருப்பது ஒலிம்பிக் போட்டிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது .

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று  பரவல் காரணமாக ஒலிம்பிக் போட்டி ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில்  ஒலிம்பிக் போட்டிகள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக கொரோனா  தொற்று பரவல்  அச்சுறுத்தலால் ஒலிம்பிக் போட்டி தொடங்க தாமதமானது .அதோடு  அதிக வெப்பம் காரணமாகவும் ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது சூறைக்காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஜப்பான் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக 156 மீட்டர் அளவுக்கு பலத்த காற்று வீசும் எனவும், வருகின்ற செவ்வாய்க்கிழமை தொடங்கும்  கனமழை ஜப்பானை  தாக்க வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.அதுவும் குறிப்பாக டோக்கியோவில் இந்த புயல் நகர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே திங்கட்கிழமை நடத்த திட்டமிடப்பட்டிருந்த படகுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்த முடிவு செய்துள்ளது. மேலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஒலிம்பிக் போட்டியில் பல போட்டிகள் நடத்த தாமதமாகலாம் என்றும் ,அதோடு பல மணி நேரம் போட்டியை  நடத்த முடியாத  நிலை ஏற்படும் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள்  தெரிவித்துள்ளனர்.

பொதுவாக ஜப்பானில் கோடைக்காலத்தில் கடுமையாக வெப்ப அலை தாக்கம் இருக்கும் .கடந்த 2018 ஆம் ஆண்டு வெப்ப அலை தாக்கத்தால் ஜப்பானில் சுமார் 1000 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே கொரோனா பரவல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள்  ஓராண்டு  தாமதமானது, அரங்கத்தின் விலை மற்றும் வடிவமைப்பு குறித்த பிரச்சினைகள் ஏற்பட்ட போது அந்நாட்டின் நிதியமைச்சரும், துணை பிரதமருமான  டாரோ அசோ ஜப்பான் நாட்டு மக்கள் சபிக்கப்பட்டவர்களா என்று ஆவேசமாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *