ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதற்கு அதிக வாய்ப்பு…! ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங்…!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அணியின் கேப்டன் கூறியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது வருகின்ற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. எனவே இந்த போட்டிக்காக இந்திய ஹாக்கி அணி தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் இந்திய ஹாக்கி ஆண்கள் அணியின் கேப்டனான மன்பிரீத் சிங் நேற்று பேட்டியில் கூறும்போது, நடைபெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நாங்கள் நிச்சயமாக பதக்கத்தை வெல்வதற்கு, மிகச்சிறந்த வாய்ப்பாக உள்ளது என்று உறுதியாக  நம்புகிறோம். இந்த நம்பிக்கையானது ஒவ்வொரு நாளும், தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவித்தார். அதோடு டோக்கியோவின் வெப்ப நிலைக்கு ஏற்ப, எங்களை  தயார் படுத்திக் கொள்வதற்காக, இங்கு வெயில் நேரங்களில் அதிக நேரம் பயிற்சியை மேற்கொண்டு வருகிறோம். ஜெர்மனி மற்றும் ஸ்பெயினுக்கு எதிரான புரோ ஹாக்கி லீக் போட்டி தள்ளிவைக்கப்பட்டது எங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது . ஏனெனில் இந்தப் போட்டியில் பங்குபெற்று விளையாடி இருந்தால், எங்களை இன்னும் தயார் படுத்திக் கொள்வதற்கு, உதவியாக இருந்திருக்கும் என்று மன்பிரீத் சிங் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்திய ஹாக்கி பெண்கள் அணியின் கேப்டன் மற்றும் வீரர்கள் 6 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதுபற்றி அணியின் கேப்டன் ராணி ராம்பால் கூறும்போது, கொரோனா தொற்றிலிருந்து  அனைத்து வீரர்களும் மீண்டுள்ளது நிம்மதி அளிப்பதாகவும் , இதன்பிறகு பயிற்சியை தொடங்க உள்ளதாகவும் அவர் கூறினார். எங்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது சற்று பின்னடைவாக இருந்தாலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ,நன்கு விளையாட வேண்டும் என்ற எண்ணத்துடன், தொடர்ந்து இலக்கை நோக்கி பயணிப்போம் என்றும் அடுத்துள்ள 75 நாட்கள் எங்களுக்கு மிகவும் முக்கியமான நாட்களாக இருப்பதாகவும் இதை நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம் என்று ராணி ராம்பால் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *